Online Registration for Fuel pass

எரிபொருள் பெற்றுக்கொள்ள புதிய தேசிய டோக்கன் முறை, இப்போதே பதிவு செய்யுங்கள்.


இப்போதே உங்கள் NIC இலக்கம்  வாகன இலக்கம் என்பவற்றை இப்பொழுது ஆன்லைனில் பதிவு செய்து டோக்கனை பெற்றுக் கொள்ளுங்கள்..விபரம் லிங்கில் கொடுக்கப்பட்டு உள்ளது.

ஒரு வாகனத்திற்கு வாரத்துக்கு இரு தடவை டோக்கன் முறை மூலம் எரிபொருள் கிடைக்கும்

👇👇👇👇👇👇👇

Register / பதிவுசெய்ய

👆👆👆👆👆👆👆👆👆👆👆

குறிப்பு – அதிகமானோர் ஒரே நேரத்தில் இணையதளத்தில் பிரவேசிப்பதால் இணையதளம் சில நேரங்களில் "error" காட்டலாம். அவ்வாறு  காட்டினால் சிறிது நேரம் கழித்தபின் முயற்சி செய்யவும்.

1 NICக்கு 1 வாகனத்திற்காண அனுமதி, வாகன சேஸ் எண் & விபரங்கள் சரிபார்க்கப்பட்டவுடன் QR குறியீடு ஒதுக்கப்படும்.  QR உடன் எரிபொருளை நிரப்புவதற்கான இலக்கத் தகட்டின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் வாரத்தின் 2 நாட்கள் வழங்கப்படும்.” 


எரிபொருளுக்காண பாஸ்ஸினை எவ்வாறு பயன்படுத்துவது?


உங்களிடம் ஸ்மார்ட் போன் இல்லை என்றால் வேறொருவரின் ஸ்மார்ட்போனில் உங்கள் பதிவை மேற்கொள்ளுங்கள். அதில் கிடைக்கும் QR code இணை டவுன்லோட் செய்து தாளில் print எடுத்து அதனைப் பாஸாக பயன்படுத்த முடியும்.

1. அனைத்து வாகனங்களுக்கும் ஒவ்வொரு கிழமையும் உறுதிப்படுத்தப்பட்ட பெட்ரோல் அளவு கட்டாயமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

2. இந்த பாஸ் Ceypetco மற்றும் IOC ஆகிய இரு பெட்ரோல் நிலையங்களிலும் செல்லுபடியாகும்.

3. வாகன இலக்கத்தின் இறுதியில் உள்ள  இலக்கங்களின் அடிப்படையில் பெட்ரோல் பெற்றுக் கொள்வதற்கான வெவ்வேறு தினங்கள் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

•வாகனத்தின் இறுதி இலக்கம் 0,1,2 – திங்கள் மற்றும் வியாழக் கிழமைகள்.

•வாகனத்தின் இறுதி இலக்கம் 3,4,5 – செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகள்.

•வாகனத்தின் இறுதி இலக்கம் 6,7,8,9 – புதன்,சனி,ஞாயிறு கிழமைகள்.

4. பதிவு செய்து கொண்ட அனைவருக்கும் உங்களுக்கான பெட்ரோல் "quota" தயார்படுத்தப்பட்டதும் உங்களுக்கு அறிவிக்கப்படும்.

5. உங்களது மொபைல் இலக்கத்துக்கு பெட்ரோல் தயாரானதும் குறுஞ்செய்தி (sms) அனுப்பப்படும்.

6.Ceypetco நிலையங்களில்  இந்த 'online  fuel pass system' நடைமுறைக்கு வந்த பின்னரே பெட்ரோல் வழங்கப்படும். "அதுவரை யாரும் தேவையின்றி வரிசையில் நிற்க வேண்டாம்." என அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

7. அது வரையிலும் IOC பெட்ரோல் நிலையங்களில் வழமைபோன்று உங்களால் பெட்ரோலை பெற்றுக் கொள்ள முடியும்.

8.ஒரு NIC அட்டை இலக்கம் அல்லது கடவுச்சீட்டு (passport) இலக்கம் அல்லது வியாபார பதிவு இலக்கத்தின் கீழ் ஒரு fuel pass மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும். அதாவது, ஒருவருக்கு ஒரு வாகனத்தை மட்டுமே தனக்கு கீழ் பதிவு செய்ய முடியும்.


# உதாரணம் ஆக  உங்கள் வீட்டில் 03 வாகனங்கள் இருந்தால் வீட்டில் உள்ள ஒருவரின் பெயரில் மூன்று வாகனங்களையும் பதிவு செய்ய முடியாது. வீட்டிலுள்ள மூன்று உறுப்பினர்களின் பெயரில் தனித் தனியே பதிவு செய்ய முடியும்.


உள்நாட்டில் குறைந்த செலவில் பெற்றோல், டீசல் உற்பத்தி


இலகுவாக கிடைக்கும் பொருட்களை கொண்டு பயோ பெற்றோல் மற்றும் பயோ டீசல் என்பவற்றை குறைந்த விலையில் உற்பத்தி செய்ய முடியும் என யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆய்வு கூட உதவியாளர் தெரிவித்தார்.நவாலியினை சேர்ந்த செல்வராசா சுரேஸ்குமார் இன்றையதினம் அதற்கான செய்முறை விளக்கத்தினை நிகழ்த்திக் காட்டினார்.

தேங்காய் எண்ணெய் ,வேப்பெண்ணெய் , சாம்பல் போன்ற இலங்கையில் இலகுவாக கிடைக்கும் மூலப்பொருட்களை வைத்து பயோ டீசலினை இலகுவாக தயாரிக்க முடியும். அதேபோன்று நீர் மற்றும் சிரட்டைக்கரி போன்ற காபன் வகைகளை பயன்படுத்தி பயோ பெற்றோலினை இலங்கையில் உற்பத்தி செய்ய முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதற்கான தயாரிப்பு மாதிரி செய்முறை விளக்கமும் அவரால் நிகழ்த்திக் காட்டப்பட்டது. பயோ டீசலினை சாதாரணமாக வீட்டினிலேயே செய்ய முடியும் எனவும் , பயோ பெற்றோல் தயாரிப்பதற்கு சுமார் 50 மில்லியன் முதலீடு தேவைப்படும் எனவும் இதற்கு அனுசரணையாளர்களும் அரசின் ஒத்துழைப்பும் கிடைக்கும் பட்சத்தில் சூழலுக்கு பாதிப்பில்லாத எரிபொருளினை மிக குறைந்த விலையில் உற்பத்தி செய்து எரிபொருள் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என்றார்.



Managing Director of 
 Blind Set 
 [News Editor & Present]
 S. Mohammed Osmi

இதுபோன்ற தகவல்களைப் எமது வலைப்பக்கத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களையும் இதன் மூலம்  பெற்றுக்கொள்ளலாம்.








No comments

Powered by Blogger.