பிரச்சினையா? அசௌகரியமா?
பிரச்சினையா? அசௌகரியமா?
ஓய்வுபெற்ற மூத்த அமெரிக்கக் கடற்படை வீரர் ஒருவர், 'நான் கற்ற பாடங்கள்' என்ற தலைப்பில் வாழ்க்கையில் கற்றுக்கொண்ட பாடங்களைப் பற்றி எழுதியுள்ளார்.
அவர் கப்பற்படையில் சிறிய பதவியில் இருந்த காலத்தில். நடுக்கடலில் இருந்த கப்பலில் ஏதோ சிரமமான வேலை அவருக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. அப்போது வேலைப்பளு அதிகமாய் இருந்த ஒருநாள், வேறு சில கூடுதல் பணியும் அவர் தலையில் விழவே அவரால் கோபத்தை கட்டுப்படுத்தமுடியவில்லை. நேரடியாக தனது உயரதிகாரியான கப்பலின் கேப்டனிடம் <Captain> சென்று கோபத்தில் கத்தியுள்ளார்.
‘முதலிலேயே எனதுபணிக்கு உதவியாளரை தரவில்லை. இப்போது வேறு வேறு கூடுதல் வேலை தருகிறீர்கள். எனக்கு பிரச்சினைக்கு மேல் பிரச்சினை தருகிறீர்களே? எவ்வாரு என்னால் வேலை பார்க்க முடியும்?’ இவ்வாறு சுமார் 1/4 மணி நேரம் விடாமல் தொடர்ந்து பொரிந்து தள்ளியிருக்கிறார்.
அவர் பேசியதில் ’பிரச்சினை’ என்ற சொல்லை பல முறைகள் உபயோகித் திருந்தார்.
பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்த கப்பலின் வயதான கேப்டன் அமைதியாகச் சொன்னாராம்,
‘நீ பேசும்போது பிரச்சினை’ என்ற வார்த்தையை அதிகம் பயன்படுத்தினாய். ஆனல் உனக்குபிரச்சினை என்றால் என்ன என்று தெரியுமா?
உனக்கு முதுகுத்தண்டு முறிந்து போய்விட்டது நீ படுத்த படுக்கையாய் இருக்கிறாய். அது குணமாக வருடக்கணக்காகும் என்றால் அதுதான் பிரச்சினை.
உன் வீடு முழுமையாக எரிந்துபோய்விட்டது, நீ எல்லாவற்றையும் இழந்து நடுத்தெருவில் நிற்கின்றாய் என்றால் அதுதான் பிரச்சினை.
ஆண்டாண்டு காலம் முயன்றால் மட்டுமே சரி செய்ய முடியும் அல்லது சரி செய்யவே முடியாது என்கின்ற வகையில் வருவது மட்டுமே பிரச்சினை ஆகும்.
இது போன்ற பிரச்சினைகள் ஒரு மனிதனின் வாழ்க்கையில் ஓரிரண்டு வரலாம் அல்லது வராமலும் இருக்கலாம்.
மற்றபடி நீ பிரச்சினை என்ற பெயரில் சொல்கின்ற எல்லாமே அசௌகரியங்கள்.
இதுபோன்ற அசௌகரியங்கள் வாழ்க்கையில் நிறைய வரும். அந்தந்தச் சமயத்தில் அது பெரிதாகத் தோன்றும். ஆனால் மணிக்கணக்கிலோ, நாட்கணக்கிலோஅது சமாளிக்கப்பட்டு மறக்கப்படக் கூடியது. பிறகு அதை யோசித்துப் பார்த்தால் அற்பமானா விடயமாகத் தோன்றும்.
இப்போது ஆத்திரப்படும் உனக்கே ஆறு மாதம் கழித்து நினைத்துப் பார்க்கையில் இது அவ்வளவு பெரிய விடயமாய் தோன்றாது. நான் சொல்வதை நன்றாக நினைவில் வைத்துக்கொள்.
நமது வாழ்க்கை முழுவதும் ஒவ்வோரு கட்டங்களிலும் இதுபோன்ற அசௌகரியங்கள் நிறையவே எற்படும். இதற்கெல்லாம் பிரச்சினை என்ற பெயரிட்டு வாழ்க்கையைப் பார்த்தால் நீ ஒருநாளும் மகிழ்ச்சியாய் இருக்க முடியாது. என்று மிகவும் அமைதியாக அறிவுரை கூறியிருக்கிறார்.
அவர் சொன்னது மிகப் பெரிய பாடமாக எனக்கு இருந்தது.
அப்போதிருந்து நான் எனக்கு சிக்கலை ஏற்படுத்தும் சூழ்நிலைகள் வரும்போதெல்லாம் அது உண்மையான பிரச்சினையா? இல்லை அப்போதைய அசௌகரியமா? என்று என்னையே கேட்டுக்கொள்ள ஆரம்பித்தேன். நம் வாழ்க்கையில் அசௌகரியங்களைத் தான் அதிகமாக சந்திக்கிறோம் உண்மையில் அவை அவ்வளவு பெரிய விடயங்கள் அல்ல என்றும் புரிய ஆரம்பித்தது.
கோபம், வருத்தம் எல்லாம் குறைய ஆரம்பித்து பொறுமையும், அமைதியும் என்னில் பெருக ஆரம்பித்தது என்று அனுபவப் பூர்வமாகச் சொல்லியிருந்தார்..
நாமும் நிதானமாக யோசிப்போம்.
நமது பிரச்சினை உண்மையில் பிரச்சினை தானா?,
இல்லை தற்போதைய அசௌகரியமா என்று!
நிம்மதி தொலைத்தவனின் கதை
ஒரு மனிதனுக்கு எந்தக் குறையும் இல்லை அவனுக்கு. ஆனாலும் அவனது மனதில் நிம்மதி இல்லை.
படுத்தால் தூக்கம் வரவில்லை சிரமப்பட்டான். அவன் மனைவி பரிதாபப்பட்டு ஒரு யோசனை கூறினால். "அருகில்உள்ள காட்டில் ஒர் ஆசிரமம் உள்ளது. அங்கு ஒரு பெரியவர் இருக்கிறார் சென்று பாருங்கள்!" என்றால்.
ஆசிரமத்துக்குப் போனான்
பெரியவரைப் பார்த்தான்.
ஐயா! மனதில் நிம்மதி இல்லே.படுத்தால் தூக்கம் வருகுதில்லை என்றான்.
அவர் நிமிர்ந்து பார்த்தார்...
தம்பி.. உன் நிலைமை எனக்குப் புரியுது...
இப்படி வந்து உட்கார்!
பிறகு அவர் சொன்னார்:
உன் மனதிற்குச் சில ரகசியங்கள் தெரியக்கூடாது தெரிந்தா உன் நிம்மதி போயிடும்!
அது எப்படிங்க?
சொல்றேன்...
அது மட்டுமல்ல மனம் தேவையில்லாத சமயங்களில், தேவையற்ற சுமைகளைச் சுமக்கறதும் இன்னொரு காரணம்!
ஐயா நீங்க சொல்றது எனக்கு புரியலே!
புரியவைக்கிறேன் அதற்கு முன் ஆசரமத்தில் விருந்து சாப்பிடு.
வயிறு நிறையச் சாப்பிட்டான்.
பெரியவர் அவனுக்கு சுகமான படுக்கை ஒன்றைக் காட்டி இதில் படுத்துக்கொள் என்றார்.
அவனும் படுத்துக் கொண்டான்...
பெரியவர் பக்கத்தில் உட்கார்ந்து கதை சொல்ல ஆரம்பித்தார்...
புகையிரதம் புறப்படப் போகிறது அவசர அவசரமாக ஒருவன் ஓடி வந்து ஏறுகிறான், அவன் தலையில் ஒரு மூட்டையுடன் வந்து ஒர் இடம் பிடித்து உட்கார்ந்தான்.
புகையிரதம் புறப்பட்டது...
தலையில் சுமந்த வந்த மூட்டையை அவன் கிழே இறக்கி வைக்கவில்லை...
எதிரே இருந்தவர் கேட்கிறார்:
"ஏம்ப்பா! எதுக்கு அந்த மூட்டையைச் சுமந்துக்கிட்டு வாறே?"
இறக்கி வையேன்.
அவன் சொல்கிறான்:
"வேணாங்க! ரயில் என்னை மட்டும் சுமந்தால் போதும் என் சுமையை நான் சுமந்துக்குவேன்!" என்றான்
பெரியவர் கதையை முடித்தார்.
படுத்திருந்த நம்ம ஆசாமி சிரித்தான்.
ஏன் சிரிக்கிறே?
பைத்தியக்காரனாக இருக்கானே ரயிலை விட்டு இறங்கும் போது, அவன் மூட்டையைத் தூக்கிட்டு இறங்கினா போதாதா? அது அவனுக்கு தெரிய வில்லையே யார் அவன்? இயல்பாக கேட்டான்
நீதான்!"
என்ன சொல்றீங்க?
பெரியவர் சொன்னார்:
வாழ்க்கை என்பதும் ஒரு ரயில்
பயணம் மாதிரிதான். பயணம் பூராவும் சுமந்து கொண்டே போகிறவர்கள் நிம்மதியாக வாழமுடியாது. தேவைப்படுகிறது மட்டும் மனதில் வைத்துக்கொள்!
அவனுக்கு தனது குறை மெல்ல
புரிய ஆரம்பித்தது...
சுகமாக தூக்கம் வந்தது. தூங்க ஆரம்பித்து விட்டான்...
அவன் கண் விழித்த போது எதிரே பெரியவர் நின்று கொண்டிருந்தார்.
"எழுந்திரு" என்றார்
உடனே எழுந்தான்!
"அந்த தலையணையைத் தூக்கு!" என்றார்.
தூக்கினான்...
அடுத்த கணம் "ஆ" வென்று
அலறினான்.
தலையணையின் அடியில் ஒரு நாகப்பாம்பு, சுருண்டு படுத்திருந்தது
ஐயா! என்ன இது?
உன் தலைக்கு வெகு அருகில் ஒரு பாம்பு...
அப்படி இருந்தும்
நீ நிம்மதியாய் தூங்கி இருக்கிறாய்...!
அது அது எனக்குத் தெரியாது...
பாம்பு பக்கத்தில் இருந்த ரகசியம் உன் மனசுக்குத் தெரியாது. அதனால் நிம்மதியாகத் தூங்கியிருக்கிறாய்!
அவன் புறப்பட்டான்,,
நன்றி பெரியவரே...
நான் போய் வருகிறேன்!
நிம்மதி எங்கே இருக்கிறது என்பதை புரிந்து கொண்டாயா?
புரிந்து கொண்டேன்!
என் மனசுக்குள்ளேயே ஒளிந்து கொண்டிருக்கிறது.
அறிவின் வெளிச்சத்தால்
Heart Touching Story IN Tamil
ஒரு விளையாட்டு மைதானத்தில். எட்டு சிறுவர், சிறுமிகள் வரிசையாக நின்று கொண்டு இருந்தனர் .
அப்போது அவர்கள் ஒரு ஓட்டப்பந்தயத்திற்காக தயாராகி கொண்டிருந்தனர்.
ரெடி, ஸ்டெடி, கோ.............. விளையாட்டு துப்பாக்கியின் சத்தம் கேட்டு குழந்தைகள் ஓட தொடங்கினர்.
ஒரு 15 அடி சென்று இருப்பார்கள். அவர்களில் ஒரு குழந்தை திடிரென்று கீழே விழுந்தது.
அடிபட்ட காரணத்தால் அந்த குழந்தை அழ ஆரம்பித்தது.
ஏதோ சத்தம் வரவே ஓடிக் கொண்டிருந்த அனைத்து குழந்தைகளும் திரும்பி பார்த்தனர். பின்னர் அந்த குழந்தையை நோக்கி ஓடி வந்தனர்.
அதில் ஒரு குழந்தை கீழே குனிந்து அவள் நெற்றியில் முத்தமிட்டு கேட்டது.
"இப்போ வலி போயிடிச்சா? "
அதை பார்த்த மற்ற குழந்தைகளும் அவளை முத்தமிட்டனர்.
பின்னர் எல்லோரும் அந்த குழந்தையை தூக்கினார்கள்.
பின்னர் அந்த குழந்தையை தூக்கியவாறே வெற்றி இலக்கை நோக்கி ஓடினார்கள்.
அதை பார்த்த விழா குழுவினரும்,பார்வையளர்களும் அதிர்ச்சி அடைந்தனர். எல்லோர் கண்களிலும் கண்ணீர். அந்த பரவசத்தால் எழுந்து நின்று கை தட்டி பாரட்டினார்கள்.
ஆமாம், இது உண்மை. இது நடந்தது இந்தியாவில், ஹைதராபாத்தில் நடந்த உண்மை.
அந்த விழாவை நடத்தியது மனநலம் குன்றியவர்களுகான தேசிய நிறுவனம்.
அதில் கலந்து கொண்ட குழந்தைகள் மனநலம் குன்றியவர்கள்.
ஆம், அவர்கள் மனத்தால் குன்றியவர்கள்.
ஆனால்........, குணத்தால்?
இதிலிருந்து அவர்கள் உலகத்திற்க்கு சொல்வது என்ன?
மனித ஒற்றுமை,
மனித நேயம்,
மனித சமத்துவம்.
வெற்றி பெற்ற மக்கள், தன்னை விட தாழ்ந்தவர்களுக்கு உதவிட வேண்டும்.
அப்போதுதான் அவர்கள் தாழ்வு மனபான்மைக்கு ஆளாக மட்டார்கள்.
நம்மில் பலர் இதை செய்வதில்லை.
ஏன்? நமக்கு மூளை இருப்பதனால்,
அன்பு பாராட்டுவோம்....
நன்றி.
No comments