WE CAN bE THE "KING" WHEN OUR TIME COMES
நமக்கான நேரம் வரும் போது நாம் தான் "ராஜா" ஆக முடியும்.
எந்த ஒரு பொருளும் தேவையின் போது அதன் உருவம் சிறிதாக இருந்தாலும் அல்லது அதன் மதிப்பு குறைவாக இருந்தாலும் அதன் பயன் கருதியே அப்பொருளுக்கு மதிப்பும் முக்கித்துவமும் உயர்கின்றது.
தேவையின் போது பயன்படாதா எந்த ஒரு பொருள் உம்மிடம் இருந்தாலும் அது உம்மிடம் இல்லாததிற்கு சமமே ஆகும்.
ஒருமுறை கை விரல்கள் ஓவ்வொன்றும் தங்களுக்குள் யார் பெரியவர் என்ற சண்டை போட்டுக்கொண்டன.
ஆள்காட்டிவிரல் நான் தான் யாரையும் சுட்டிக்காட்ட தேவைப்படுகிறேன் தேர்தலின்போது நாட்டையே ஆளபோகின்றவர்களை தேர்ந்தேடுக்கும் பொது வாக்கு உரிமை செய்ததிற்கு அடையாளமாக அடையாள மை எனது நகக் கண்ணில் தான் வைக்கப்படுகிறது அதனால் நானேஉ யர்ந்தவன என்றது.
நடு விரலோ நானே எல்லோரையும்விட நீளமானவன் எனவே நான் தான் பெரியவன் என்றது.
மோதிர விரலோ என் விரலில் தான் விலை உயர்ந்த மோதிரத்தை மனிதன் அணிகிறான் அதனால் நானே மதிப்புமிக்கவன் என்றது.
சுண்டிவிரலோ மனிதன்இல்லற வாழ்க்கைதொடங்கும்போது திருமண ஒப்பந்தத்தின் அடையாளாமாக முதலில் மணமகனும் மணமகளும் என்னைத் தான் இணைத்துக்கொள்ளுகிறார்கள் அதனால் நானே பெரியவன் என்றது சுண்டி விரல்.
பெருவிரலோ மனிதன் தன் சுகமான வாழ்க்கைக்கு சொத்து வாங்குகிறான் என்றால் சொத்து வாங்கியதற்கு அடையாளாமாக என் விரல் ரேகைத் தான் பத்திர பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யப்படுகிறார்கள் எனவே நானே உயர்ந்தவன் என்றது.
அவரவர்களுக்கு அவரவர் பணியே உயர்ந்தது.
இவைகளெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த உள்ளங்கையோ "உங்களை எல்லாம் நான் தான் ஒருங்கிணைக்கிறேன் அதனால் நானே உயர்ந்தவன்" என்றது.
எந்த ஒரு பொருளும் தேவையின் போது அதன் உருவம் சிறிதாக இருந்தாலும் அல்லது அதன் மதிப்பு குறைவாக இருந்தாலும் அதன் பயன் கருதியே அப்பொருளுக்கு மதிப்பும் முக்கித்துவமும் உயருகிறது.
எனவே
உங்களுக்கான தேவை வரும் வரை காத்துக்கொண்டிருங்கள்.
மகனாவது எப்படியென்று உங்களுக்குத்தெரியுமா?
குறுநில மன்னன் தனது நாட்டில் நகர் வலம் வந்து கொண்டிருந்தான். அப்போது அங்கிருந்த பிச்சைக்காரன் ஒருவன் மன்னனிடம் பிச்சை கேட்டான். மன்னன் அவனை நோக்கி, "என் அமைதியை கெடுக்காதே" எனச் சொல்லி விரட்டினார். உடனே பிச்சைக்காரத் துறவி உங்களுடைய அமைதி கெடக்கூடிய நிலையில் இருந்தால் அது அமைதியில்லை என்று கூறினான்.
உடனே மன்னன் சுதாரித்துக் கொண்டு, தன்னிடம் பிச்சை கேட்டவன் பிச்சைக்காரர் வேடத்தில் இருக்கின்ற ஒரு துறவி என்பதை புரிந்துகொண்டு "துறவியே உங்களுக்கு என்ன வேண்டுமென்றாலும் என்னிடம் கேளுங்கள்" என்றான். அதற்கு அந்த துறவி, "நான் கேட்பதை உங்களால் ஒருபோதும் கொடுக்க முடியாது" என்று கூற, அதை கேட்ட மன்னனுக்கு கோபம் பொத்துக்கொண்டடுது.
மன்னன் நகர்வலத்தை நிறுத்தினான். பிச்சைக்காரனை அழைத்துக் கொண்டு அரண்மனைக்கு திரும்பினான். "இப்பபோது கூறுங்கள் உங்களுக்கு என்ன வேண்டும்?" என்றான். உடனே துறவி தனது பிச்சை பாத்திரத்தைக் காட்டி "இது நிறைய தங்கக் காசுகள் போடுங்கள்." என்று கூறினான். "பூ இவ்வளவு தானா?" என்று கேட்ட மன்னன், தனது கைகளை தட்டினான்அங்கிருந்த காவலாளிகள் ஓடி வந்தனர். உடனே தாம்பாளம் நிறைய தங்கக் காசுகளை கொண்டுவந்தனர்.
மன்னனே தனது கையால் தங்கக் காசுகளை அள்ளி, அள்ளி பிச்சைக்காரனின் பாத்திரத்தில் போட்டான்.. ஆனால் அந்தப் பாத்திரம் நிறையவே இல்லை. கஜானாவில் இருந்த அணைத்து தங்கக் காசுகளையும் போட்டும், பாத்திரம் நிறையவில்லை. கடைசியில் மன்னன் அவன்கிட்ட சரணடைந்தான். அப்போது அந்த பிச்சைக்காரத் துறவி சொன்னான், அரசே! இந்தப் பிச்சைப் பாத்திரத்தை உங்களால் மட்டுமல்ல எப்பேர்பட்ட சக்ரவர்த்திகளாலும் நிரப்ப முடியாது.
No comments