A Step-by-Step Guide to How To Improve Your English 02
நீங்களாகவே உங்கள் ஆங்கில அறிவை மேம்படுத்துவதற்கான படிப்படியான வழிகாட்டி - 02
Easy English course
இது ஒரு தொடர் பாடநெறியாகும். இது ஆங்கில வசனங்களை அமைப்பு ரீதியாக கற்றுக்கொள்ளும் இரண்டாவது பாட அலகாகும்.
14. Be அமைப்பு -2 கீழுள்ள வசனங்களில் வரும் “இரு, இருக்க” என்ற சொல்லுக்கு "Be" பயன்படுத்தப்படும். சொல்லப்படும் நபர் அல்லது எழுவாயினை முதலில் சொல்லி பின்னர் பின்னே இருந்து ஒவ்வொரு சொல்லாக சொல்ல வேண்டும்.
அவர் ஒரு டாக்டராக இருக்க லாம்
He may be a doctor
அவர் ஒரு ஆசிரியராக இருக்க கூடும் He might be a teacher
அவன் ஒரு மாணவனாக இருக்க ணும்
He must be a student
15. Be அமைப்பு - 3
நபர் சம்பந்தப்படாமல் வரும் வசனங்களில் வரும் “இரு, இருக்க” என்ற சொல்லுக்கு Be பயன்படுத்தப்படும். இருக்கலாம்” There may be “இருக்கக்கூடும்” என்பதை There might be என்றும் “இருக்கணும்” என்பதை There must be/There should be சொல்லப்படும். இந்த வசனங்களில் எழுவாய் இல்லை என்பதால் வசனத்தினை பின்னே இருந்து ஒவ்வொரு சொற்களாக சொல்ல வேண்டும்.
நாளை ஒரு வகுப்பு இருக்கலாம்
There may be a class tomorrow
அடுத்தவாரம் பரீட்சை இருக்ககூடும் There might be exam next week
மேசையில் ஒரு பேனை இருக்கணும் There must be a pen on the table
16. Have நபர் சம்பந்தப்பட்டு வரும் கீழுள்ள வசனங்களில் வரும் “இரு, இருக்க” என்ற சொல்லுக்கு Have பயன்படுத்தப்படும். சொல்லப்படும் நபர் அல்லது எழுவாயினை முதலில் சொல்லி பின்னர் பின்னே இருந்து ஒவ்வொரு சொல்லாக சொல்ல வேண்டும்.
அவர்களுக்கு நாளை வகுப்பு இருக்க லாம்
They may have a class tomorrow
அவளுக்கு நாளை பரீட்சை இருக்க கூடும்
She might have exam tomorrow
அவனிடம் ஒரு கணினி இருக்க ணும் He must have a computer
17. Want அமைப்பு - பெயர் சொற்களுடன் தமிழில் பெயர் சொற்களுடன் "வேணும்” என்று வரும்போது ஆங்கிலத்தில் Want என்ற சொல்லால் தெரிவிக்கலாம்.
சொல்லப்படும் நபர் அல்லது எழுவாயினை முதலில் சொல்லி பின்னர் பின்னே இருந்து ஒவ்வொரு சொல்லாக சொல்ல வேண்டும்.
எனக்கு ஒரு பேனை வேணும்
I want a pen
எங்களுக்கு கொஞ்சம் பணம் வேணும்
We want some money
எனக்கு ஒரு கம்பியூட்டர் வேணும்
I want a computer
18. Want அமைப்பு - வினைச்சொற்களுடன்
தமிழில் வினை சொற்களுடன் “விரும்புதல்" என்று வரும்போது ஆங்கிலத்தில் Want என்ற சொல்லால் தெரிவிக்கலாம்.
நாங்கள் ஒரு வீடு வாங்க விரும்புறம் We want to buy a house
அவர்கள் அங்கு வேலைசெய்ய விரும்புகிறார்கள்
They want to work there
நான் ஒரு புத்தகம் வாசிக்க விரும்புறன்
I want to read a book
19. Going to (with am/is/are)
எதிர்கால வசனங்களை Will உடன் வசனங்களை அமைப்பது போன்று வினைச்சொற்களுடன் --போகிறான், போகிறாள், போகிறார்கள்' என்ற சொற்களைப்பயன்படுத்தியும் எதிர்கால வசனங்களை சொல்லலாம். இதனை ஆங்கிலத்தில் Going to என்ற அமைப்பால் சொல்லலாம்.
நான் அடுத்த வருடம் பரீட்சை எழுத போகிறேன்.
I am going to write the exam next year
அவன் நாளை அவர்களை சந்திக்க போகிறான்.
He is going to meet them tomorrow
20. Able ஆங்கிலத்தில் “இயலுமாய்” என்ற சொல்லுக்கு able என்ற சொல் பயன்படுத்தப்படும். இதனுடன் Am, Is, Are இனை பயன்படுத்தி -இயலுமாய் இருக்கிறது” என்றும் Was, Were இனை பயன்படுத்தி “இயலுமாய் இருந்தது” என்றும் Will be இனை பயன்படுத்தி “இயலுமாய் இருக்கும்” என்றும் வசனங்களை சொல்ல முடியும்.
நான் இப்ப நடக்க இயலுமாய் இருக்கிறது
I am able to walk now
அவர்கள் வேலைசெய்ய இயலுமாய் இருந்தது
They were able to work
நாங்கள் அங்கு போக இயலுமாய் இருக்கும்
We will be able to go there
வினை வடிவங்கள்
Base Verb Present Participle Past Participle
Go போ, போக போய்க்கொண்டு போய்
Going Gone
சாப்பிடு, சாப்பிட சாப்பிட்டுக்கொண்டு சாப்பிட்டு
Eat Eating Eaten
எழுது, எழுத எழுதிக்கொண்டு எழுதி
Write Writing Written
சொல், சொல்ல
Tell
சொல்லிக்கொண்டு
Telling
சொல்லி
Told
21. முடியாத வினை வடிவம் (Past Participle)
Past Participle (முடியாத வினை) வடிவங்களுடன் “இரு” அல்லது “இருக்க" என்பதை தெரிவிக்க have பயன்படுத்தப்படும்.
அவர்கள் சொல்லி இருக்க லாம்
They may have told
அவர்கள் சொல்லி இருக்க கூடும்
They might have told
அவன் அங்கே போய் இருக்க கூடும். He might have gone there
அவன் அங்கே போய் இருக்க ணும்
He must have gone there
Past Participle (முடியாத வினை) வடிவங்களுடன்
“இருக்கிறான், இருக்கிறார்கள், இருக்கிறாள்” என்பதாக நிகழ்காலத்தில் வரும்போது அதை “விட்டான், விட்டார்கள், விட்டாள்” எனவும் சொல்லலாம்.
அவர்கள் போய் இருக்கிறார்கள் அவர்கள் போய் விட்டார்கள் They have gone
நான் சொல்லியிருக்கிறேன் நான் சொல்லி விட்டேன் I have told
நாங்கள் ஆரம்பித்து இருக்கிறோம் நாங்கள் ஆரம்பித்து விட்டோம். We have started
22. முடியாத வினை வடிவம் (Past Participle) - இறந்த காலம்
Past Participle (முடியாத வினை) வடிவங்களுடன் “இருந்தான், இருந்தாள், இருந்தார்கள்” என இறந்தகாலத்தில் சொல்ல had பயன்படுத்தப்படும்.
அவர்கள் போய் இருந்தார்கள்
They had gone
நான் சொல்லி இருந்தேன்
I had told
அவள் அறிவித்து இருந்தாள்
She had informed
நாங்கள் ஆரம்பித்து இருந்தோம்
We had started
23. Present Participle (கொண்டு வினை ) வடிவங்களுடன் “இரு” அல்லது “இருக்க” என்பதை தெரிவிக்க be பயன்படுத்தப் படும்.
அவர்கள் வேலைசெய்துகொண்டு இருக்க லாம் They may be working
அவன் எழுதிக்கொண்டு இருக்க கூடும் He might be writing
அவன் வேலைசெய்துகொண்டு இருக்கணும்.
He must be working
அவன் எழுதிக்கொண்டு இருப் பான் He will be writing
Present Participle (கொண்டு வினை) வடிவங்கள் நிகழ்காலத்தில் வரும்போது “எழுதிக்கொண்டு
இருக்கிறான், --வேலைசெய்துகொண்டு இருக்கிறார்கள்” போன்ற அமைப்பினை வெறுமனே “எழுதுகிறான், வேலைசெய்கிறார்கள்” என்று சொல்லப்படும். இந்த அமைப்ப தொடர்பான மேலதிக விளக்கம் பிறிதொரு அலகில் விளக்கமாக கற்பிக்கப்படும்.
அவர்கள் வேலைசெய்துகொண்டு இருக்கிறார்கள்
அவர்கள் வேலைசெய்கிறார்கள்
They are working
அவன் ஒரு புத்தகம் வாசித்துக்கொண்டு இருக்கிறான் அவன் ஒரு புத்தகம் வாசிக்கிறான்
He is reading a book
24. Simple present tense - வழக்கமான வசனங்கள்
ஆங்கிலத்தில் போறனாங்கள், எழுதுகிறனான், சாப்பிடுகிறவள்” போன்ற வழக்கமான வசனங்களை தெரிவிக்க Base Verb மட்டும் பயன்படுத்தப்படும். He, She போன்ற சொற்களுடன் Base Verb உடன் s அல்லது es சேர்த்து பயன்படுத்தப்படும். இந்த அமைப்பு தொடர்பான மேலதிக விளக்கம் பிறிதொரு அலகில் விளக்கமாக கற்பிக்கப்படும்.
அவர்கள் சந்தைக்கு போகிறவர்கள். They go to the market
அவன் ஒவ்வொருநாளும் அவர்களை சந்திக்கிறவன்
He meets them everyday
நான் அங்கு வேலைசெய்கிறேன்.
I work there
25. Past tense - இறந்தகால வசனங்கள்
ஆங்கிலத்தில் இறந்தகால வசனங்களை உருவாக்க இறந்தகால வினைவடிவம் பயன்படுத்தப்படும். இந்த அமைப்பு தொடர்பான மேலதிக விளக்கம் பிறிதொரு அலகில் விளக்கமாக கற்பிக்கப்படும்.
நான் நேற்று அவர்களை பார்த்தேன்
I saw them yesterday
அவர்கள் எங்களுடைய வீட்டுக்கு வந்தார்கள்
They came to our hous
நாங்கள் நேற்று ஒரு கம்பியூட்டர் வாங்கினோம்
We bought a computer yesterday
26. Has been/ Have been நிகழ்கால வசனங்களை சொல்கிறபோது அவை குறிப்பிட்ட காலத்திலிருந்து அல்லது ஒரு குறிப்பிட்ட காலமாக செய்யப்படுமாயின் அந்த வசனங்களில் am, is, are இற்கு பதிலாக has been, have been பயன்படுத்தப்படும். இந்த அமைப்பு தொடர்பான மேலதிக விளக்கம் பிறிதொரு அலகில் விளக்கமாக கற்பிக்கப்படும்.
அவன் வேலை செய்கிறான்
He is working
அவன் காலையிலிருந்து வேலை செய்கிறான்
He has been working since morning
அவர்கள் படிக்கிறார்கள்
They are studying
அவர்கள் ஜனவரியிலிருந்து படிக்கிறார்கள்
They have been studying since January
அவள் ஒரு புத்தகம் வாசிக்கிறாள்
She is reading a book
அவள் இரண்டு மணிநேரமாக ஒரு புத்தகம் வாசிக்கிறாள்.
She has been reading a book for two hours
உதாரணங்கள்,
1. அவர்கள் அடுத்தவாரம் பரீட்சை எழுத முடியும்
They can write the exam next week
2. நான் நாளை அவர்களை சந்திக்கணும்
I should meet them tomorrow
3. இப்ப அதை எடுக்க வேண்டாம்
Don't take that now
4. அவன் அதை வாங்க கூடும்
He might buy that
5. நான் நாளை அலுவலகத்துக்கு போக வேண்டியிருக்குது
I have to go to the office tomorrow
6. அந்த புத்தகத்தை எனக்கு தா
Give me that book
7. அவர்கள் இப்ப சாப்பிட போகிறார்கள்
They are going to eat now
8. நான் இப்ப ஆங்கிலம் கதைக்க இயலுமாயிருக்குது
I am able to speak English now
9. அவள் இப்ப யாழ்ப்பாணத்தில் இருக்க கூடும்
She might be in Jaffna now
10. நாளைக்கு ஒரு புறோக்கிறாம் இருக்குது
There is a program tomorrow
11. அவள் அதை அவர்களுக்கு சொல்லு வாள்
She will tell them that
12. எனக்கு நாளைக்கு ஒரு வகுப்பு இருக்குது
I have a class tomorrow
13. அவர்கள் நாளை இங்கு வர விரும்பினம்
They want to come here tomorrow
14. நீங்கள் நாளை இங்கு வரணும்
You must come here tomorrow
15. நான் நேற்று அவர்களை சந்திக்க வேண்டியிருந்தது
I had to meet them yesterday
16. அவனுக்கு இப்ப ஒரு பிரச்சினை இருக்குது
He has a problem now
17. நான் இப்ப வேலைசெய்கிறன்
I am working now
18. அவனிடம் ஒரு கம்பியூட்டர் இருந்தது
He had a computer
19. அவர்கள் அதை உங்களுக்கு தர லாம்
They may give you that
20. நாளை அதை ஆரம்பிப்பமா
Shall we start that tomorrow
21. அவர்கள் அதை அனுப்பி விட்டார்கள்
They have sent that
22. நான் நேற்று அதை சொன்னேன்
I told that yesterday
23. நான் நேற்றிலிருந்து இங்கே வேலைசெய்கிறேன்
I have been working here since yesterday
24. அவன் அதை எனக்கு சொல்லியிருந்தான்
He had told me that
25. நாங்கள் ஒவ்வொரு மாதமும் பொதிகள் அனுப்புகிறனாங்கள்
We send parcels every month
26. அவன் அதை அனுப்பி இருக்க
கூடும்
He might have sent that
பயிற்சி 1
கீழுள்ள வசனங்களை ஆங்கிலத்தில் எழுதுக.
1. அவர்கள் இன்று வரக் கூடும்
2. நாங்கள் இப்ப போகவேண்டியிருக்குது
3. அவர்கள் அதை எனக்கு சொல்லணும்
4. இப்ப அங்க போக வேண்டாம்
5. பெட்டியில ஒரு பேனா இருக்குது 6. எனக்கு ஒரு பென்சில் வேணும்
7. அவன் அதை எழுத இயலுமாயிருக்கும்
8. நாங்கள் இன்று அங்க போகணும்
9. அவர்கள் நேற்று பணம் செலுத்த வேண்டியிருந்தது
10. நான் அதை உங்களுக்கு தருவேன்
11. அதை அவர்களுக்கு சொல்லுவமா?
12. நாங்கள் அவர்களுக்கு அறிவிக்க இயலுமாய் இருந்தது
13. நாளை காலையில் வாங்கோ
14. நான் அவர்களோட விளையாட விரும்புறன்
15. நீங்கள் நாளை அதை குடுக்க முடியும்
16. அதைப்பற்றி அவர்களை கேப்பமா?
17. அவன் அதை எனக்கு தந்தான்
18. எதுவும் அவர்களை கேட்க வேண்டாம்
19. அவர்கள் இப்ப அறையில இருக்க லாம்
20. நாங்கள் நாளை அவர்களை சந்திக்கணும்
21. நேற்று ஒரு பரீட்சை இருந்தது
22. அவன் அதை சொல்லி விட்டான்
23. அவர்கள் இப்ப இங்க வர லாம்
24. நீங்கள் அதை குடுக்க வேண்டியிருக்கும்
25. அவர்கள் நேற்று ஒரு கம்பியூட்டர் வாங்கினார்கள்
26. அவன் அதை சொல்லி இருக்க ணும்
27. அவள் இப்ப வந்துகொண்டு இருப் பாள்
28. அவர்கள் அதை அறிவித்து இருந்தார்கள்
29. அதை உங்களுக்கு தரட்டா 30. அவர்கள் அதை உங்களுக்கு தரக்கூடும்
No comments