A Step-by-Step Guide to How To Improve Your English 01

நீங்களே உங்கள் ஆங்கில அறிவை மேம்படுத்துவதற்கான படிப்படியான வழிகாட்டி - 01

Easy English course 


       இது ஒரு தொடர் பாடநெறியாகும். இது ஆங்கில வசனங்களை அமைப்பு ரீதியாக கற்றுக்கொள்ளும் முதலாவது பாட அலகாகும்.

       ஒவ்வொரு அமைப்பிலும் தரப்பட்டுள்ள உதாரணங்களை விட மேலதிக உதாரணங்களை நீங்களாக சொல்லி பழக்கப்படுத்துங்கள். ஆங்கிலமும் தமிழும் அமைப்பு ரீதியாக எதிர் எதிர் திசைகளை கொண்டவை.

       எனவே இந்த அடிப்படையில் எந்த இலக்கண விளக்கமும் இன்றி இலகுவாக தமிழ் வசனங்களை ஆங்கிலத்தில் சொல்ல முடியும்.
உதாரணமாக,
 
"அவர்கள் நாளை இங்கு வர வேண்டியிருக்கிறது."
இதை ஆங்கிலத்தில் சொல்ல முதலில் எழுவாய் அதாவது “அவர்கள்” என்பதை ஆங்கிலத்தில் சொல்லி பின்னர் பின்னே இருந்து ஒவ்வொரு சொல்லாக சொல்வோமாயின் அதுவே ஆங்கிலம் ஆகும்.

அவர்கள் நாளை இங்கு வர வேண்டியிருக்கிறது
இங்கு,

1. அவர்கள் - They 
2. வேண்டியிருக்கிறது - have to 
3. வர - come 
4. இங்கு - here 
5. நாளை - tomorrow
    எனவே,

 They have to come here tomorrow


1. ஏவல் வசனங்கள்.

முன்னே உள்ள ஒருவரிடமோ அல்லது பலரிடமோ ஒரு செயலை செய்யச்சொல்லி சொல்கிறதான அமைப்பே இந்த ஏவல் வசன அமைப்பாகும். இதில் தமிழில் "நாங்கள் நீ அல்லது நீங்கள்" என்று தமிழில் வசனத்தினை ஆரம்பித்தாலும் ஆங்கிலத்தில் "You" என்ற எழுவாய் பயன்படுத்தப்படுவதில்லை . எனவே வசனங்களை நேரடியாக பின்னே இருந்த சொல்ல வேண்டும்.

Ex-

பெட்டியை திற - Open the box

அவர்கள் நாளை இங்கு வர வேண்டியிருக்கிறது.
இங்கு,
 1. அவர்கள் - They 
2. வேண்டியிருக்கிறது - have to 
3. வர - come 
4. இங்கு - here 
5. நாளை - tomorrow
எனவே,

 They have to come here tomorrow

நாளை அந்த கடிதத்தை அனுப்பு -  Send the letter tomorrow

நாளை என்னுடைய வீட்டுக்கு வா - Come to my house tomorrow


2. ஏவல் எதிர்மறை வசனங்கள்.

ஏவல் வசனத்தினை போன்றே இதுவும் முன்னே உள்ள ஒருவரிடமோ அல்லது பலரிடமோ ஒரு செயலை செய்ய வேண்டாம் என்று சொல்கிறதான அமைப்பே ஆகும். 

இதிலும் தமிழில் "நாங்கள், நீ அல்லது நீங்கள்" என்று வசனத்தினை ஆரம்பித்தாலும் ஆங்கிலத்தில் "You" என்ற எழுவாய் பயன்படுத்தப்படுவதில்லை என்பதை கவனிக்கவும். 

எனவே ஏவல் வசனங்களை போன்றே வசனங்களை நேரடியாக பின்னே இருந்த சொல்ல வேண்டும்.

அதை எடுக்க வேண்டாம் - Don't take that 

இங்கு வேண்டாம் - Don't

நாளை அங்கே போக வேண்டாம் - Don't go there tomorrow

இப்ப அதை சாப்பிட வேண்டாம் - Don't eat that now


3. தீர்மான வசனங்கள் 
 
We நாங்கள் எதையாவது ஒன்றை செய்வமா என தீர்மானிப்பதற்காக மற்றவர்களிடம் கேட்கும் வசன அமைப்பு இதுவாகும்.

 இந்த அமைப்பில் தமிழில் பொதுவாக நாங்கள் என்ற சொல்லில் நாம் ஆரம்பிப்பதில்லை. இங்கு கடைசியில் வரும் ”வமா” என்பதை ஆங்கிலத்தில் "Shall we” என்று சொல்லப்படும். வசனத்தில் மிகுதியை பின்னே இருந்து சொல்ல வேண்டும்.

நாளைக்கு அங்க போ வமா? - Shall we go there tomorrow?

விருந்துக்கு அவர்களை அழைப் பமா? - Shall we invite them to the party?

நாளைக்கு அதை ஆரம்பிப் பமா? - Shall we start that tomorrow?

இந்த வசனங்களில் தமிழில் "நாங்கள்" என்று ஆரம்பித்தாலும் ”நாங்கள் வமா” என்பதை சேர்த்து "Shall we” என்று பயன்படுத்த வேண்டும். மிகுதியை பின்னே இருந்து சொல்ல வேண்டும்.


4. தீர்மான வசனங்கள் 

"நான் எதையாவது ஒன்றை செய்யட்டா?" என தீர்மானிப்பதற்காக மற்றவர்களிடம் கேட்கும் வசன அமைப்பு இதுவாகும். இதிலும் தமிழில் பொதுவாக ”நான்" என்ற சொல் பயன்படுத்துவதில்லை . இங்கு "ட்டா" என்பதை தெரிவிக்க ஆங்கிலத்தில் "Shall I” என்று பயன்படுத்தப்படும். அத்துடன் மிகுதி பகுதி பின்னே இருந்து முன்னோக்கி சொல்ல வேண்டும்.

ஒரு கடிதம் எழுத ட்டா? - Shall I write a letter?

இன்று அதை ஆரம்பிக்க ட்டா? - Shall I start that today?

அவர்களை போய் சந்திக்கட்டா? - Shall I go and meet them?


"போய் சந்திக்கட்டா” என்று வரும்போது இதில் இரண்டு வினைச்சொற்கள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து வரும்போது இரண்டு வினைச்சொற்களுக்கிடையே "And" பயன்படுத்தி பயன்படுத்தப்படும்.

5. நபர் சம்பந்தப்படாத

 “இருக்குது” என்று வரும் வசனங்கள் நபர் சம்பந்தப்படாத வசனங்களில் “இருக்குது” என்று வரும்போது அந்த “இருக்குது” என்பதை தெரிவிக்க
"There is / There are" 6760 MILD இருந்தது” என்பதை தெரிவிக்க "There was/There were" என்றும் “இருக்கும்” என்பதை தெரிவிக்க "There will be" என்றும் சொல்லப்படும். வசனங்களை பின்னே இருந்து ஒவ்வொரு சொல்லாக சொல்ல வேண்டும்.

மேசையில் ஒரு கம்பியூட்டர் இருக்கிறது - There is a computer on the table

நேற்று ஒரு பரீட்சை இருந்தது - There was an exam yesterday

நாளை ஒரு வகுப்பு இருக்கும் - There will be a class tomorrow


6. நபர் சம்பந்தப்பட்ட

 “இருக்குது” என்று வரும் வசனங்கள்
நபர் சம்பந்தப்பட்ட வசனங்களில் “இருக்குது” என்பதை தெரிவிக்க நபருடன் “Has/Have" என்றும் “இருந்தது” என்பதை தெரிவிக்க நபருடன் “Had" என்றும் “இருக்கும்” என்பதை தெரிவிக்க நபருடன் "Will have" என்றும் பயன்படுத்தப்படும்.

எனக்கு நாளை ஒரு வகுப்பு இருக்குது -  I have a class tomorrow

அவனிடம் ஒரு கம்பியுட்டர் இருக்குது - He has a computer

அவளுக்கு நேற்று ஒரு பரீட்சை இருந்தது - She had an exam yesterday

எங்களுக்கு நாளை ஒரு புறோக்கிறாம் இருக்கும் - We will have a program tomorrow

சில முக்கியமான துணை வினைச்சொற்கள் தமிழில் வினைச்சொற்களை முடிப்பதற்கு நாம் பயன்படுத்துகின்ற சொற்கள் அல்லது எழுத்துச் சேர்மானங்கள் ஆங்கிலத்தில் வினைச்சொற்களுக்கு முன்பாக பயன் படுத்தப்படும். 

துணை வினைச்சொற்கள் தொடர்பாக பிறிதொரு அலகில் முழுமையாக பார்க்கலாம் முடியும்.

- Can லாம்
- May கூடும்
- Might) அணும்/ஒணும் - Must/Should வேண்டியிருக்குது - Has tol Have to எதிர்காலம்- Wil


  7. "Can" தமிழில் “முடியும்” என்று சொல்லும் வசனங்களை பொதுவாக ஆங்கிலத்தில் "Can" என்று சொல்ல முடியும். ஆனாலும் பின்னைய அலகில் இது தொடர்பாக விரிவாக பார்க்கலாம்.

 சொல்லப்படும் நபர் அல்லது எழுவாயினை முதலில் சொல்லி பின்னர் பின்னே இருந்து ஒவ்வொரு சொல்லாக சொல்ல வேண்டும்.

அவர்கள் நாளை வர முடியும்
They can come tomorrow

நான் அடுத்தவருடம் பரீட்சை எழுத முடியும்.
I can write the exam next year.

நான் நாளை அவர்களை சந்திக்க முடியும். 
I can meet them tomorrow.


    8. "May" தமிழில் “லாம்” என்று சொல்லும் வசனங்களை பொதுவாக ஆங்கிலத்தில் "May" என்று சொல்ல முடியும். ஆனாலும் பின்னைய அலகில் இது தொடர்பாக விரிவாக பார்க்கலாம். சொல்லப்படும் நபர் அல்லது எழுவாயினை முதலில் சொல்லி பின்னர் பின்னே இருந்து ஒவ்வொரு சொல்லாக சொல்ல வேண்டும்.

அவர்கள் இன்று இங்கு வரலாம்.
 They may come here today.

நான் நாளை அவர்களை சந்திக்க லாம்.
I may meet them tomorrow.

நீங்கள் நாளை அந்த புத்தகத்தை தர லாம். 
You may give that book tomorrow.


9. "Might" தமிழில் "கூடும்” என்று சொல்லும் வசனங்களை பொதுவாக ஆங்கிலத்தில் "Might' என்று சொல்ல முடியும். ஆனாலும் பின்னைய அலகில் இது தொடர்பாக விரிவாக பார்க்கலாம். சொல்லப்படும் நபர் அல்லது எழுவாயினை முதலில் சொல்லி பின்னர் பின்னே இருந்து ஒவ்வொரு சொல்லாக சொல்ல வேண்டும்.

அவள் நாளை இங்கு வரக் கூடும் 
She might come here tomorrow

நாங்கள் நாளை அவர்களை சந்திக்க
கூடும்
We might meet them tomorrow

அவன் அந்த கடிதத்தை எழுதக் கூடும் He might write that letter


10. "Should/Must" நான் நாளை அவர்களை சந்திக்கணும், அவர்கள் நாளை இங்கு வரணும் என்கின்றதாக
சொல்லப்படும் வசனங்களில் சொல்லப்படும் “அணும்” என்ற சொல்லை ஆங்கிலத்தில் Must அல்லது Should என்று சொலப்படும். அதிகாரத்துடன் அல்லது விரும்பியோ விரும்பாமலோ
செய்ய நிர்ப்பந்திக்கப்படும்போது Must உம் மற்றைய சந்தர்ப்பங்களில் Should உம் பயன்படுத்தலாம்.

ஆனாலும் பின்னையதொரு அலகில் இது தொடர்பாக விரிவாக பார்க்கலாம். சொல்லப்படும் நபர் அல்லது எழுவாயினை முதலில் சொல்லி பின்னர் பின்னே இருந்து ஒவ்வொரு சொல்லாக சொல்ல வேண்டும்.

நீங்கள் இப்ப போகணும் 
You should go there now

அவள் அடுத்தவருடம் பரீட்சை எழுதணும் 
She should write the exam next year

அவர்கள் இன்று அதை திருப்பித்தர ணும்
They must return that today

நாங்கள் இன்று பரீட்சைக்கட்டணம் செலுத்த ணும் 
We must pay the exam fee today


11. வேண்டியிருக்குது தமிழில் “வேண்டியிருக்குது” என்று சொல்லும் வசனங்களை ஆங்கிலத்தில் Has to/Have to என்றும் வேண்டி யிருந்தது” என்பதை Had to என்றும் --வேண்டியிருக்கும்” என்பதை Will have to என்றும் சொல்ல முடியும். சொல்லப்படும் நபர் அல்லது எழுவாயினை முதலில் சொல்லி பின்னர் பின்னே இருந்து ஒவ்வொரு சொல்லாக சொல்ல வேண்டும்.

நான் இன்று அங்கு போக வேண்டி யிருக்குது 
I have to go there today


அவள் அடுத்தவருடம் பரீட்சை எழுதணும் 
She should write the exam next year

அவர்கள் இன்று அதை திருப்பித்தர ணும் 
They must return that today

நாங்கள் இன்று பரீட்சைக்கட்டணம் செலுத்தணும் 
We must pay the exam fee today

அவர்கள் ஒரு புத்தகம் வாங்க வேண்டி யிருந்தது 
They had to buy a book

நாங்கள் நாளை அவர்களை சந்திக்க வேண்டியிருக்கும்
 We will have to meet them tomorrow


12. "Will" தமிழில் எதிர்காலத்தில் வசனங்களை சொல்லும்போது நபருக்கு ஏற்ப வினைச்சொல்லின் முடிவில் --பேன், பான், பாள், பார்கள், போம்” என்பதுபோல் வரும். இந்த வசனங்கள் ஆங்கிலத்தில் வினைச்சொற்களுக்கு முன்பாக Will பயன்படுத்தி எதிர்காலத்தினை காட்டப் படும். ஆனாலும் பின்னைய அலகில் இது தொடர்பாக விரிவாக பார்க்கலாம். சொல்லப்படும் நபர் அல்லது எழுவாயினை முதலில் சொல்லி பின்னர் பின்னே இருந்து ஒவ்வொரு சொல்லாக சொல்ல வேண்டும்.

அவர்கள் நாளை இங்கு வருவார்கள் They will come here tomorrow


நான் அதை அவர்களுக்கு அறிவிப் பேன்
 I will inform them that

அவன் ஒரு கம்பியூட்டர் வாங்கு வான் He will buy a computer

அவர்கள் ஒரு கடிதம் எழுது வார்கள் They will write a letter


13. Be அமைப்பு -1 ஆங்கிலத்தில் “இரு” என்கின்ற வினைச்சொல்லுக்கு Be, Have என்ற இரு வினைச்சொற்கள் பயன்படுத்தப்படும். கீழுள்ள வசனங்களில் வரும் “இரு, இருக்க” என்ற சொல்லுக்கு Be பயன்படுத்தப்படும். சொல்லப்படும் நபர் அல்லது எழுவாயினை முதலில் சொல்லி பின்னர் பின்னே இருந்து ஒவ்வொரு சொல்லாக சொல்ல வேண்டும்.

அவன் கொழும்பில் இருக்க லாம் 
He may be in Colombo

அவள் இந்தியாவில் இருக்க கூடும் She might be in India

அவர்கள் அறையில் இருக்க ணும் They must be in the room

அவர்கள் நாளை இங்கு இருக்க வேண்டியிருக்குது 
They have to be here tomorrow



  

தொடரும்...

இதன் தொடர் பாகங்கள் வேண்டும் என்று என்னுபவர் கீழே comment செய்யுங்கள்.

மேலும்  உங்களுடைய கருத்துக்களையும் comment செய்யுங்கள்.


Managing Director of 
 Blind Set 
 [News Editor & Present]
 S. Mohammed Osmi

இதுபோன்ற மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களையும் எமது வலைப்பக்கத்தின் மூலம்  பெற்றுக்கொள்ளலாம்.





No comments

Powered by Blogger.