Online Registration for E-bill Service

Online Registration for E-bill Service


ஜனவரி முதல் காகிதமற்ற மின்சார பட்டியலும் பற்றுச்சீட்டும் அறிமுகம்-மின்சக்தி எரிசக்தி அமைச்சர் தெரிவிப்பு....

🔊எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அனைத்து மின்சார பாவனையாளர்களுக்கும் காகிதமற்ற மின்சார பட்டியலும் பற்றுச்சீட்டும் அறிமுகப்படுத்தப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

🔊வீதி விளக்குகளை பொருத்துதல், அவற்றை இயக்குவதை ஒழுங்குபடுத்துதல் குறித்தும் மின்சார சபைக்கு வெளியே மேற்கொள்ள வேண்டிய பணிகளை தற்போதுள்ள ஊழியர்களை பயன்படுத்தி மேற்கொள்ளவும், தற்போது முன்னெடுக்க முடியாத பணிகளை பிரதேச சபைகளின் உதவியுடன் மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

🔊இலங்கை மின்சார சபையின் உயர்மட்ட அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். இதன்போது, மின்சார சபையின் செலவுகளைக் குறைப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதுடன்,  அதன் புதிய தலைமையக நிர்மாணப் பணிகளை முன்னெடுப்பது தொடர்பான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன. 


இரண்டு  முறைகளில் மின்சார கட்டண பட்டியலை உங்களுடைய ஈமெயிலில் பெறுவதற்கு பதிவு செய்து கொள்ள முடியும்.

முதலாவது sms ஊடாக பதிவு செய்ய  முடியும்.


“EBILL” <space> Account number <space> Email address  என்பவற்றை டைப் செய்து 1987 க்கு அனுப்புவதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

இந்த மின்சார கட்டண பட்டியலில் உங்கள் account இலக்கமும் காணப்படும்.

இரண்டாவது இணையதளத்தில் நேரடியாக பதிவு செய்ய முடியும். 


ebill.ceb.lk என்ற லிங்கை கிளிக் ஐ செய்து  வலை தளத்தில் நுழைந்த பின்னர் ஒரு திரை தோன்றும். 

அதில் முதலாவதாக உங்கள் electicity கட்டண பட்டியல் இலக்கத்தைக் கொடுத்து "Verify Account" என்பதை கொடுங்கள்.

பிறகு உங்களுக்கு ஒரு otp  வரும் அதை பெற்று, "Otp" எனும் இடத்தில் கொடுத்து  "Verify otp" ஐ கொடுங்கள். 

பின்னர் email முகவரியை கொடுத்தபின் மீண்டும் ஒருமுறை email ஐ கொடுத்து 
"I agree..." என்பதை டிக் செய்து
"save" என்பதை கொடுத்து பதிவு செய்துகொள்ளுங்கள். 

E bill register



அதன் பின்னர் உங்கள் மின்னஞ்சலுக்கு மாதம் தோறும் மின்கட்டணப் பட்டியல் வந்து சேரும்.

CEB E-Bill register








Managing Director of 
 Blind Set 
 [News Editor & Present]
 S. Mohammed Osmi

No comments

Powered by Blogger.