ஒரு ஏழையின் நம்பிக்கை


நம்பிக்கை..!


story 01


மணிவண்ணனுக்கு சந்தோஷமாக இருந்தது. மதுரையிலிருந்து வந்த அவனது மாமா அவனுக்காக ஒரு பேனாவை அன்பளிப்பாகக் கொடுத்திருந்தார்.

மணிவண்ணன் அப்படி ஒரு பேனாவைப இதுவரை பார்த்தது கிடையாது.

இவன் வகுப்பில் படிக்கும் M.L.A மகனிடம் கூட இப்படிப் பட்ட பேனா இல்லை.

பேனாவின் மூடியும், முள்ளும் தங்கம் போல பளபளவென்று காட்சியளித்தது.

பாசலை போனதும் பேனாவை எல்லோரிடமும் காட்டினான்.

மாமா இவன் மீது மிகவும் அன்பு வைத்திருந்தார்.

வகுப்பில் முதல் மாணவனாகவும் மிகவும் ஒழுக்கமானவனாகவும் விளங்கிய மணிவண்ணனை உற்சாகப்படுத்த விரும்பினார் அவன் மாமா.

“நீ படித்து பெரியவன் ஆகியதும் என்ன வேலைக்குப் போவாய்” என்று கேட்டார் மணிவண்ணனின் மாமா.

“நான் படித்து கலெக்டராக வருவேன்” என்றான்.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த அவன் அப்பா “விரலுக்கேத்த வீக்கம் வேண்டும். நீ ஒறு சாதாரண விவசாயியின் மகன். நீ ஆசைப்படுவதில் அளவு வேண்டும்” என்றார்.

மணிவண்ணனின் சந்தோஷம் மணலில் பாய்ந்த தண்ணீராய் மறைந்து போனது.

“ஒரு ஏழையின் மகன் கலக்டராக வர ஆசைப்படுவது பேராசையா?” என்று அவனுக்குள் ஒரு கேள்வி எழுந்தது.

வகுப்பில் மணிவண்ணன் உற்சாகமின்றி உட்கார்ந்திருந்தான்.

பாடங்களில் அவன் மனம் லயிக்கவில்லை. வகுப்பு ஆசிரியர் அவனை கவனித்து விட்டார்.

ஆசிரியர் அவனை தனியாக அழைத்து விசாரித்தார்.

“ஒரு ஏழையின் மகன் கலக்டராக ஆசைப்படுவது பேராசையா” என்றான்.

அவன் சொன்னதைக் கேட்டதும் ஆசிரியர் கலகலவென்று சிரித்தார்.

“இதற்கு நானே உனக்கு நல்ல பதிலைச் சொல்லுவேன். ஆனாலும் இன்று மாலை வரை காத்திரு. எது பேராசை என்று புரிந்து கொள்வாய்” என்றார்.

அன்று மாலை பள்ளியின் ஆண்டு விழா நடைபெற்றது.

ஆண்டு விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமை தாங்கினார்.

மாவட்ட ஆட்சித் தலைவர் பேசும் போது "மாணவர்கள் நன்றாகப் படித்து முன்னுக்கு வரவேண்டும்." என்று அறிவுரை சொல்லிக் கொண்டிருந்தார்.

அப்போது கூட்டத்தில் உட்கார்ந்திருந்த மணிவண்ணனிடம் வந்த ஆசிரியர், “உன் சந்தேகத்தை அவரிடமே கேள்” என்றார்.

முதலில் தயங்கிய மணிவண்ணன் தைரியமாக எழுந்து கலக்டரிடம் கேட்டான். “ஒரு ஏழை விவசாயியின் மகனாக இருந்தாள் அவன் ஒரு கலெக்ட்ராக வர ஆசைப்பட்டால் அது பேராசையா?”

“நிச்சயமாக இல்லை, நேர்மையான வழிகலில் பெறுவதாய் இருந்தால் உலகத்தையே வாங்க ஆசைப்படுவதில் தவறு இல்லை” என்று பளிச்சென்று கூறினார் கலக்டர்.

“நானும் ஒரு சாதாரண ஏழை விவசாயியின் மகன் தான்”என்றார் கலக்டர்.

“உழைப்பும் உறுதியான முயற்சியும் இருந்தால் எதற்கும் ஆசைப்படலாம். அது ஒருபோதும் பேராசையாகாது” என்று பேசி முடித்தார் கலக்டர்.

இருபது ஆண்டுகள் உருண்டோடியது.


அதே பள்ளியில் மாவட்ட ஆட்சித் தலைவராகா மணிவண்ணன் ஆண்டு விழாவில் பேசிக் கொண்டிருந்தார்.

“உறுதியான நம்பிக்கையும்  முயற்சியும் உழைப்பும் தர தயாராக இருந்தால் கலக்டராக மட்டுமல்ல, இந்த நாட்டின் ஜனாதிபதியாக வர ஆசைப்படுவது கூட ஒருபோதும் பேராசை ஆகாது” என்று கலக்டர் மணிவண்ணன் சொன்ன போது மாணவர்கள் அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

story 02

ஒருபோதும் நம்பிக்கையை இழக்காதீர்கள்



நான்கு மெழுகுவர்த்திகள் ஒரு அறையில் இருந்து கொண்டிருந்தன.

அப்போது பலமான காற்று வீசிக்கொண்டிருந்தது.

            அவ் மெழுகுவர்த்திகளில் அமைதி என்ற பெயர் கொண்ட முதலாவது மெழுகுவர்த்தி " ஐயோ நான் அணைந்து விடுவேனோ?" என பயந்தது.

அனைந்தும் போனது .

       "அன்பு என பெயர் கொண்ட மெழுகுவர்த்தி இக் காற்றை என்னால் எதிர்க்க முடியாது." என கூறிக் கொண்டே அணைந்தது.

         அறிவு என்ற பெயர் கொண்ட மெழுகுவர்த்திக்கு அக் காற்றை தடுக்க சக்தி இல்லாததால் அணைந்தது.

    இறுதியில் நான்காவது மெழுகுவர்த்தி மட்டும் காற்றுக்கு முகம் கொடுத்து அணையாமல் இருந்தது.

        அறைக்கு வந்த சிறுவன் மெழுகுவர்த்திகள் எல்லாம் அணைந்து விட்டனவே என்றான்.

     அதற்கு எரிந்து கொண்டிருக்கும் நான்காவது மெழுகுவர்த்தி  வருந்தாதே.. என்னை வைத்து அனைந்தவைகளை எரியவை  என்றது.

    அப்போது சிறுவன் உனது பெயர் என்ன என நான்காவது மெழுகுவர்த்தி இடம் கேட்டான்.

 "நான் தான் நம்பிக்கை" என சிரித்துகொண்டே மெழுகுவர்த்தி பதில் கூறியது.

 எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் நம்பிக்கையை இழக்காதீர்கள். ஏனெனில்  சில நேரத்தில்  நம்பிக்கையை இழப்பது நம்மை இழப்பதற்கு ஒப்பாகிவிடும்.



story 03





        ஒரு இடத்தில் பல யானைகள் கட்டப்பட்டிருந்தன. அப்போது அந்த வழியாக சென்ற ஒருவர் அந்த யானைப் பாகனிடம் "இவ்வளவு சிறிய மெண்மையான சங்கிலிகளை பெரிய யானைகள் அறுக்காதா என வினவினார்.

        அதற்கு அந்த பாகன் இந்த யானைகள் சிறு வயதாக இருக்கும் போதே கட்டி வைத்தோம். அப்போது இந்த யானைகளுக்கு இந்த சங்கிலிகளை அறுக்க முடியாது என எண்ணி கொண்டன.

     அது போல வளர்ந்ததும் தங்களால் அறுக்க முடியாது என எண்ணி தங்களை விடுவிக்க முயற்சிக்கவே வில்லை.

   இந்த யானைகளை போன்று நம்மில் எத்தனையோ பேர் இருக்கிறோம்,

ஒரு முறை முயற்சித்து தோற்றதால் மறுபடியும் முயற்சிக்காமல் முடங்கிக் கிடக்கின்றோம்....

ஒரு முறை சிந்தித்து பாருங்கள் நண்பர்களே

வெற்றியும் தோல்வியும் நிரந்தரமல்ல ஆனால் முயற்சி மட்டுமே நிரந்தரமானது.

இதை உணர்ந்தவர்கள் வாழ்வில் மட்டும் அல்ல. வாழ்க்கையையே வெல்ல முடியும்...







No comments

Powered by Blogger.