LOTS OF FASCINATING INFORMATION ABOUT THE OCEAN


கடல் பற்றிய அதிர்ந்திடும் தகவல்கள்..


🟦 கடல் (ocean) என்பது முக்கியமான உப்பு நீர் நிலை ஆகும். இது நீர்க் கோளத்தின்  முக்கியமான கூறும் ஆகும். 


🟦 ஏறத்தாழ 71% புவி மேற்பரப்பு (361 மில்லியன் சதுர கிலோமீட்டர்) தொடர்ச்சியாக அமைந்துள்ள பெருங்கடல்களினால் மூடப்பட்டுள்ளது. இது பல பெருங்கடல்களாகவும், பல சிறிய கடல்களாகவும்  பிரிக்கப்பட்டுள்ளது.


🟦 பூமியின் மேற்பரப்பில் சுமார் 71% மற்றும் பூமியின் உயிர்க்கோளத்தில் 90% அடங்கியது கடல் ஆகும்.


🟦 புவியில் உள்ள நீரில் 97% கடலில் உள்ளது, மேலும் கடல்சார் அறிஞர்கள் உலக சமுத்திரத்தில் 5% க்கும் குறைவாகவே ஆய்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.


🟦 புவியின் கடலானது ஏறக்குறைய 3,700 மீட்டர் (12,100 அடி) சராசரி ஆழத்துடன், 1.35 பில்லியன் கனசதுர கிலோமீட்டர் (320 மில்லியன் க்யூ) நீரைக் கொண்டது ஆகும்.

 

🟦 இதன் பரப்பளவின்  அரைப் பகுதிக்கு மேல் 3,000 மீட்டருக்கு (9,800 அடி) மேற்பட்ட ஆழம் கொண்டது.


🟦 சராசரி  உப்புத்தன்மை ஆயிரத்தில் 35 பகுதி (35%) ஆகும். பொதுவாக முழுக் கடல்நீரும் சராசரியாக ஆயிரத்துக்கு 30 - 38 பகுதிகள் உப்புத்தன்மை கொண்டது.


🟦 பூமியின் உயிர்கோலத்தில் உலகப் பெருங்கடல்கள் முக்கிய அங்கமாக இருப்பதால், இது அனைத்து காலங்களிலிலும், கார்பன் சுழற்சியின் பகுதிகள், காலநிலை மற்றும் வானிலை போன்றவற்றை பாதிக்கிறது. 


🟦 உலகில் வாழும் உயிரினங்களில் கடலிலேயே அதிகமான உயிரினங்கள் வாழ்கின்றன. சுமார் கடலில் கிட்டத்தட்ட 95% ஆன உயிரினங்கள் வாழ்கிறன.


🟦 உலக சமுத்திரத்தில் 230,000 அறியப்பட்ட உயிரினங்கள் உள்ளன, ஆனால் பெரும்பாலானவற்றை கண்டுபிடிக்க முடியாததால், இருபது மில்லியனுக்கும் அதிகமான உயிரினங்கள் உள்ளதாக கருதப்படுகிறது.

🟦 கடல் முழுவதும் சுமார் 20 மில்லியன் டன் தங்கம் சிதறிக் காணப்படுகின்றன. இதனை பூமியில் உள்ள ஒவ்வொருவருக்கும் சமமாக பகிர்ந்தோமானால், நாம் ஒவ்வொருவருக்கும் அதில் இருந்து ஒன்பது பவுண்டுகள் (pounds) கிடைக்கும்.


🟦 கடல் பனி குடிக்கக்கூடியது.

ஐஸ் கட்டிகளின் குவியலாக காணப்படும்  கடல் நீரை நீங்கள் குடிக்க முடியாது, ஆனால் நீங்கள் கடல் பனியை குடிக்கலாம். இருப்பினும், நீங்கள் புதிய கடல் பனியை குடிக்க விரும்பமாட்டீர்கள் ஏனெனில்  அதில் சிறிதளவு  உப்பு காணப்படும். இருப்பினும் பனி வயதாகும்போது உப்பு நீரை வெளியேற்றிவிடும்.


🟦 கடல்தான் நமக்கு ஆக்ஸிஜனின் மிகப்பெரிய ஆதாரமாகக் காணப்படுகின்றது.  நமது வளிமண்டலத்தில் உள்ள பெரும்பாலான ஆக்ஸிஜன் கடலில் உள்ள சிறிய சிறிய கடல் தாவரங்களிலிருந்தே வருகிறது. குறிப்பாக, பைட்டோபிளாங்க்டன், கெல்ப் மற்றும் பாசி பிளாங்க்டன். நேஷனல் ஜியோகிராஃபிக் படி, வளிமண்டலத்தின் 70% ஆக்சிஜனுக்கு அவர்கள் காரணம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.


பெருங்கடல்கள் பற்றித் அறிவோம்.

புவியல்லாத இடங்களிலுள்ள கடல்கள்.


🟦 பூமியின் பெருங்கடலின் தோற்றம் குறித்து இதுவரை தெரியப்படவில்லை. 

🟦 ஹேடான் காலத்தில் உருவாகிய சமுத்திரங்கள், உயிர்களின் வெளிப்பாட்டிற்கு உந்துதலாக இருந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

🟦 சூரிய மண்டலத்தில் மற்ற இடங்களில் சமுத்திரங்கள் இருப்பதற்கான சான்றுகள் காணப்படுகின்றன.

🟦 புவிக்கு வெளியே உறுதிப்படுத்தப்பட்ட ஒரே நீர்மக் கடல் சனி கோளின் துணைக்கோளான டைட்டனில் உள்ள பெரிய டைட்டானின் ஏரிகள் ஆகும்.

🟦 புவியியல் வரலாறுகளின் படி துவக்கத்தில், செவ்வாய் & வெள்ளி ஆகியவை பெரிய நீர் சமுத்திரங்களைக் கொண்டிருந்ததாக கோட்பாடு கூறுகின்றன.

🟦 செய்வ்வாய் கிரகத்தில் கடல் குறித்த கருதுகோள், "செவ்வாயின் மேற்பரப்பில் மூன்றில் ஒரு பகுதி தண்ணீரால் மூடப்பட்டிருந்ததாக கூறுகிறது."

🟦வெள்ளி கிரகத்தில் ஏற்பட்ட பசுமைக்குட்டில் விளைவால் அங்கிருந்த கடல்கள் ஆவியாகி சென்றிருக்கலாம் என்கின்றனர்.

🟦 "பல குள்ள கிரகங்கள் & துணைக்கோல்களின் மேற்பரப்பில் உறுதிபடுத்தப்படாத பல சமுத்திரங்கள் இருக்கலாம்" என கூறப்படுக்கிறது.

🟦 குறிப்பிடத்தக்க வகையில், வியாழன் கோளின் துணைக்கோலான ஐரோப்பாவின் கடல் பூமியின் நீரின் அளவைவிட 02 மடங்கு அதிகமாகக் கொண்டிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

🟦 சூரியக் குடும்பத்தில் உள்ள பெரிய கிரகங்களில் திரவ வளிமண்டல அடுக்குகள் இன்றும் இருக்கலாம் என உறுதிப் படுத்தகூடிய கூறுகளைக் கொண்டிருக்கின்றன.

🟦 பெருங்கடல் கிரகங்கள் என்பது ஒரு கருதுகோள் வகையாகும். இந்த கிரகங்களின் மேற்பரப்பு முழுவதும் திரவத்தால் மூடப்பட்டிருக்கும்.


Managing Director of 
 Blind Set 
 [News Editor & Present]
 S. Mohammed Osmi

இதுபோன்ற மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களையும் எமது வலைப்பக்கத்தின் மூலம்  பெற்றுக்கொள்ளலாம்.








No comments

Powered by Blogger.