HOW WILL ELECTRICITY TARIFF HIKE AFFECT YOU?

மின்சார கட்டண அதிகரிப்பு உங்களை எவ்வாறு  பாதிக்கும்?


நீங்கள் மாதாந்தம் பயன்படுத்தும் அலகுகளுக்கேற்ப  (units) உங்களுடைய புதிய மின் கட்டணத்தை அறிந்துகொள்ளுங்கள். 

மின்கட்டண அதிகரிக்க முன்னர் கட்டணமும் கட்டண அதிகரிப்பின் பின்னர் மின்கட்டணமும் கீழே தரப்பட்டுள்ளன.

மேலும் எவ்வாறு மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுதுவது? என்பதனையும் அறிந்துகொள்ளுங்கள்.

💡நீங்கள் ஒரு மாதம் 25 units மின்சாரம் பாவிப்பவராயின் 
இப்பொழுது உங்களுடைய மின் கட்டணம் = (25×2.50)+30 = 92.50

கட்டண அதீகரிப்பின் பின்  உங்களுடைய   மின் கட்டணம்  = (25×8) +120 = 320.00

💡நீங்கள் ஒரு  மாதம் 55 units மின்சாரம் உங்களுடைய பாவிப்பவராயின் 
இப்பொழுது மின் கட்டணம் = (30×2.50)+(25×4.85) +60 = 256.25

கட்டண அதீகரிப்பின் பின் உங்களுடைய மின் கட்டணம்  =  (30×8)+(25×10)+240 = 730.00

💡நீங்கள் ஒரு  மாதம் 85 units மின்சாரம் பாவிப்பவராயின் 
உங்களுடைய இப்பொழுது மின் கட்டணம் = (60×7.85)+(25×10)+90 = 811.00

கட்டண அதீகரிப்பின் பின் உங்களுடைய மின் கட்டணம்  =  (85×16)+360 = 1720.00

💡நீங்கள் ஒரு  மாதம் 115 units மின்சாரம் பாவிப்பவராயின் 
உங்களுடைய இப்பொழுது மின் கட்டணம் = (60×7.85)+(30×10)+(25×27.75)+480 = 1944.75

கட்டண அதீகரிப்பின் பின் உங்களுடைய  மின் கட்டணம்  =  (90×16)+(25×50)+960 = 3650.00

💡நீங்கள் ஒரு  மாதம் 175 units மின்சாரம் பாவிப்பவராயின் 
உங்களுடைய இப்பொழுது மின் கட்டணம் = (60×7.85)+(30×10)+(30×27.75)+(55×32)+480 = 3843.50

கட்டண அதீகரிப்பின் பின் உங்களுடைய  மின் கட்டணம்  =  (90×16)+(85×50)+960 = 6650.00

💡நீங்கள் ஒரு  மாதம் 250 units மின்சாரம் பாவிப்பவராயின் 
உங்களுடைய இப்பொழுது மின் கட்டணம் = (60×7.85)+(30×10)+(30×27.75)+(60×32)+(70×45)+540 =7213.50

கட்டண அதீகரிப்பின் பின் உங்களுடைய  மின் கட்டணம்  =  (90×16)+(90×50)+(70×75)+1500 = 12690.00

💡நீங்கள் மாதம் 400 units மின்சாரம் பாவிப்பவராயின் 
இப்பொழுது உங்களுடைய 
மின் கட்டணம் = (60×7.85)+(30×10)+(30×27.75)+(60×32)+(220×45)+540 = 13963.50

கட்டண அதீகரிப்பின் பின் உங்களுடைய  மின் கட்டணம்  =  (90×16)+(90×50)+(220×75) +1500 = 23940.00


மின்சாரக் கட்டண அதிகரிப்பானது கிட்டத்தட்ட இரண்டு மடங்காக அதிகரித்துக் காணப்படுவதை அறிய முடிகின்றது.

மேலே தரப்பட்டுள்ள கட்டணங்களை கருத்தில் கொண்டு மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.


மின்சாரத்தைச் சேமிப்பதற்காக பயன்பாட்டில் இல்லாதபோது மின்விக்குகள் அல்லது மின் சாதனங்களை   அணைத்து வைக்கவும்.

உங்கள் உடைகள் மற்றும் பாத்திரங்களை இயற்கையாக உலர வைக்கவும்.
உங்கள் துணிகளை வெயிலில் உலர்த்துவதன் மூலம் மின் உலர்த்தியின் பயன்பாட்டைக் குறைக்கலாம். உலர்த்துவதற்கு அதிக நேரம் எடுக்கும், இருப்பினும்  குறைந்த அளவில் மின் உலர்த்தியை  பயன்படுத்தவும்.

கதவுகள் மற்றும் திரைச்சீலைகளை பயன்படுத்துங்கள். அதாவது உங்களுக்குத் தேவையான அறைகளை மட்டும் சூடாக்குங்கள் அல்லது குளிரூட்டுங்கள். வெப்ப திரைச்சீலைகளை நிறுவி பயன்படுத்துவதன் மூலம் குளிர்ந்த பருவங்களில் வெளியில் வெப்ப இழப்பைத் தவிர்த்துக் கொள்ளலாம்.

உங்கள் துணிகளை உலர்த உலர்த்தியில் வைப்பதற்குப் பதிலாக அவற்றைத் கொடிகளில் தொங்கவிட்டு சூரிய  வெப்பத்தில் உலர்த்துங்கள். 

மேலும் கையால் பாத்திரங்கள் மற்றும் உடைகளைக் கழுவுவது போன்ற வீட்டுப் பணிகளை கைகளால் செய்வதன் மூலம் மின் உபகரணங்களை நீங்கள் குறைவாகப் பயன்படுத்தலாம்.

மின்சாரத்தை  சேமிக்க 10 புதிய  வழிகள் முறைகள்.

  1. முதலில் உங்கள் அன்றாட நடத்தைகளை ஒழுங்கு படுத்துங்கள்.
  1. உங்கள் மின் விளக்குகளை மாற்றவும். அதாவது குறைந்த அளவு  மின்சாரத்தை கொண்டு இயங்கும் மின் விளக்குகளை பொறுத்துங்கள்.
  1. ஸ்மார்ட் பவர் ஸ்ட்ரிப்களைப் பயன்படுத்தவும்.
  1. குறைந்த அளவு  மின்சாரத்தை கொண்டு இயங்கும்  சாதனங்களைப் பயன்படுத்துங்கள்.
  1. மின்சாரத்தில் தண்ணீரை சூடாக்கும் தடவைகளை குறைக்கவும்
  1. உங்கள் HVAC சிஸ்டத்தை மேம்படுத்தவும்
  1. உங்கள் துணிகளை குளிர்ந்த நீரில் கழுவவுங்கள்.
  1. உங்கள் காற்று வடிகட்டிகளை மாற்றவுங்கள்.
  1. உங்கள் மின் அடுப்புக்குப் பதிலாக மைக்ரோவேவ் ஐ பயன்படுத்தவும்.
  1. இயற்கை ஒளியைப் அதிகளவு பயன்படுத்துங்கள்.

Managing Director of 
 Blind Set 
 [News Editor & Present]
 S. Mohammed Osmi

இதுபோன்ற மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களையும் எமது வலைப்பக்கத்தின் மூலம்  பெற்றுக்கொள்ளலாம்.


No comments

Powered by Blogger.